
நகரத்தில் உள்ள சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு வாரமும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பி பட்டியலின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
அந்தப் பட்டியலில் நகரத்தில் உள்ள ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் தொடர் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நகரத்தில் உள்ள மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் தொடராக சிறகடிக்க ஆசை உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் கோமதி பிரியா நாயகியாகவும் வெற்றி வசந்த் நாயகனாகவும் நடிக்கின்றனர். எஸ்.குமரன் இந்தத் தொடரை இயக்குகிறார். சன் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றி அடைந்த திருமதி செல்வம் தொடரை இயக்கியவர்.
தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நாயகி, குடிப்பழக்கம் கொண்ட ஓட்டுநரை (நாயகன்) எதிர்பாராத விதமாக திருமணம் செய்துகொள்கிறார். அந்தத் திருமணத்துக்குப் பிறகு இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, புற அழுத்தங்களை சமாளிப்பதே சிறகடிக்க ஆசை தொடரின் கரு.
பல தொடர்கள் சின்னத்திரை முன்னணி நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்டாலும், பெரிதாக அறிமுகமில்லாத இரு நட்சத்திரங்கள் முதன்மை பாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்துள்ளனர்.
நகர்புறங்களில் அதிகம் புள்ளிகளைப் பெற்று சிறகடிக்க ஆசை தொடர் நகர மக்களால் அதிகம் பார்க்கப்படும் தொடர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சன் தொலைக்காட்சியின் கயல் தொடர் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.