

ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானாலும் பியார் பிரேமா காதல் (2018) படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர்தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரைப் பெற்றுள்ளார்.
இறுதியாக, ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. 5 மொழிகளில் ரீமேக் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, இவர் நடித்த டீசல் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், பாஸ்ஸன் ஸ்டூடியோஸ் (passion studios) மற்றும் தி ரூட் நிறுவனம் (the route) தயாரிப்பில் ‘அந்தகாரம்’ படத்தின் இயக்குநர் விக்னாராஜன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.