அதே அன்பும், அக்கறையும்.. நீண்ட நாள் கழித்து நடிக்கும் தேவையானி!
சின்னத்திரை நடிகை நீலிமா, தேவையானி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட நாள்கள் கழித்து நடிகை தேவையானி நடிக்கவுள்ளதால், ரசிகர்கள் பலர் நீலிமாவின் பதிவுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் சின்னத்திரையில் பிரபலமானவர்கள் என்பதால், இருவரும் புதிய தொடரில் இணைந்து நடிப்பார்கள் என பலர் எதிர்பார்த்த நிலையில், இருவரும் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதையும் நீலிமா விளக்கியுள்ளார்.
சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த தேவையானி, சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார். 2003ஆம் ஆண்டு கோலங்கள் தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் கால்பதித்த அவர், தொடர்ந்து பல தொடர்களில் நாயகியாகவே நடித்தார்.
2021ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நடித்திருந்தார்.
எஸ்.ஜே. சூர்யாவுடன் நியூ திரைப்படத்தில் (2004) நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் அவர் நடிக்கவுள்ளார்.
சின்னத்திரை நடிகை நீலிமா தேவையானி உடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நீண்ட நாள்களுக்குப் பிறகு தேவையானி அக்காவை சந்தித்தது மகிழ்ச்சி. அவரின் அன்பு, அக்கறை மாறவேயில்லை. அவருடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி. அதியமான் திரைப்படத்தில் நடிக்கிறோம். இது அருமையான நாள் எனப் பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை ரசிகர்கள் பலர் தேவையானிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.