கல்கி வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கல்கி வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Updated on
1 min read

பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'.

நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வியாழக்கிழமை (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

முக்கியமாக, படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளும் கமல்ஹாசனின் தோற்றமும் பெரிதும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

இப்படம், முதல்நாளில் உலகளவில் ரூ.191 கோடி வசூலித்திருந்த நிலையில், தற்போது முதல் இரண்டு நாள்களில் உலகளவில் ரூ.298.5 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படம் இந்த வார முடிவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com