
2022ஆம் ஆண்டு மார்ச் 27இல் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது விழாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியின் முடியில்லா தலையைப் பற்றி கேலியாகக் குறிப்பிட்டார். இதனைக் கேட்ட பார்வையாளர்கள் சிரித்தனர். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வில் ஸ்மித் அந்த மேடையிலேறி கிறிஸ் ராக்கைக் கன்னத்தில் அறைந்தார்.
இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையானது. பின்னர், நோயின் காரணமாக மனைவிக்கு முடி கொட்டும் பிரச்னையால் அவருடைய மனது பாதிக்கப்பட்டது. அதனால் கோபத்தில் அடித்தேன் என வில் ஸ்மித், கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.
முதன்முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற வில் ஸ்மித்தை ஆஸ்கர் கமிட்டி 10 ஆண்டுகள் ஆஸ்கர் குழுவிலிருந்து நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.
4 முறை கிராமி விருதினை வென்ற 55 வயதான நடிகர், ரேப் பாடகர் வில் ஸ்மித் 2017 முதல் தனது தனிப் பாடல்களினை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் வில் ஸ்மித், “யுவ் கேன் மேக் இட்” என்ற ஆல்பத்தினை வெளியிட்டுள்ளார். இதில் வரும் சில வரிகள் கிறிஸ் ராக் சம்பவத்தினை நினைவுப்படுத்துவதாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
"வில் ஸ்மித்தினை ரத்தம் சிந்த வைக்க அவர்கள் முயற்சித்தார்கள், அதன் பின்புற கண்ணாடியில் துரதிருஷ்டம் பரிசாக இருப்பதைப் பார்த்தேன்” என சில வரிகளில் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையானப் பாடலை விடியோவாக வில் ஸ்மித் யூடியூப் பக்கத்தில் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.