கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாகவும் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தி்லும் நடித்திருந்தனர்.
சலார் திரைப்படம் டிச. 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.600 கோடி வரை வசூலித்தது. இப்படம் ஜனவரி மாதம் ஓடிடியில் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதால் ஏப்ரல் மாதம் சலார் - 2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை துவங்க இயக்குநர் பிரசாந்த் நீல் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.