மஞ்ஞுமல் பாய்ஸ் - இதை கவனித்தீர்களா?

குணா குகையை மையப்படுத்தி வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
மஞ்ஞுமல் பாய்ஸ் - இதை கவனித்தீர்களா?

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்ஞுமல் பாயஸ் திரைப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்ஞுமல் பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, உலகளவில் ரூ.120 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் 300 திரைகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை அடைந்திருக்கிறது மஞ்ஞுமல் பாய்ஸ்.

DOTCOM

நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா படத்தின் தாக்கத்தை வைத்தே மஞ்ஞுமல் பாய்ஸ் உருவாகியிருக்கிறது.

சுவாரஸ்யமாக, கமல்ஹாசன் குணா படத்தில் நடித்தபோது அவருக்கு வயது 33. மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரத்திற்கு தற்போது 33 வயது. சரியாக, குணா திரைப்படம் வெளியாகியும் 33 ஆண்டுகள் ஆகிவிட்டது!

கமல்ஹாசனின் பிறந்தநாளைக் கணக்கிட்டால் 36 வயதில்தான் குணா படத்தில் நடித்திருக்கிறார்.

ஆனால், குணா படத்தில் நடிக்கும்போது தனக்கு 33 வயது என நடிகர் கமல்ஹாசன் தன்னிடம் கூறியதாக இயக்குநர் சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார்.

மஞ்ஞுமல் பாய்ஸ் - இதை கவனித்தீர்களா?
வெளியானது 'ஆடு ஜீவிதம்' டிரைலர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com