‘அழகியே இப்படி நடந்துகொள்’: ஸ்ரேயாவுக்கு ரஜினி கூறிய அறிவுரை!

‘அழகியே இப்படி நடந்துகொள்’: ஸ்ரேயாவுக்கு ரஜினி கூறிய அறிவுரை!

நடிகர் ரஜினிகாந்த் தனக்கு கூறிய அறிவுரையை நினைவு கூர்ந்துள்ளார் நடிகை ஸ்ரேயா.
Published on

நடிகர் ரஜினிகாந்த் தனக்கு கூறிய அறிவுரையை நினைவு கூர்ந்துள்ளார் நடிகை ஸ்ரேயா.

தமிழ்,தெலுங்கு, ஹிந்திப் படங்களில் நடித்துவரும் நடிகை ஸ்ரேயாவின் சமீபத்திய இணையத்தொடரான ‘ஷோடைம்’ நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. ஷோ டைம் படத்தில் எம்ரான் ஹாஸ்மி, நசுரூதின் ஷா, மௌனி ராய், மஹிமா மக்வானா போன்றோர் நடித்துள்ளனர். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்தத் தொடர் வெளியாகியுள்ளது.

சினிமாத்துறையில் ஏற்படும் சிக்கல்கள் குறித்த இந்தத் தொடர் நல்ல வரவேற்பினைப் பெற்றதைத் தொடர்ந்து நடிகை ஷ்ரேயா பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

‘அழகியே இப்படி நடந்துகொள்’: ஸ்ரேயாவுக்கு ரஜினி கூறிய அறிவுரை!
சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் வெளியீடு எப்போது?

நான் ஒரு முறை படப்பிடிப்பின்போது இயக்குநர் அமர்ந்திருந்த நாற்காலினை இழுத்தபோது அவர் கீழே விழுந்தார். இயக்குநரை அழ விட்டிருக்கிறேன். இதேபோல நடிகர் விக்ரமையும் செய்துள்ளேன். ஆனால் நான் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். ஏனெனில் அவர்கள் எனக்கு, ‘நீ சொதப்பும்போது நீ முடிந்து விட உன்னால் பாதிக்கப்பட்ட அனைவரும் காத்திருப்பார்கள்’ என விளையாட்டாகக் கூறினார்கள். இதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்போதுதான் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

நான் பல அற்புதமான நடிகர்களுடன் நடித்துள்ளேன். அதில் நாகர்ஜுனா, ‘யோகா செய்தால் நம்மை சுற்றியுள்ள பல பிரச்னைகளை சரியாகும்’ எனக் கூறினார். ரஜினி ஒரு முறை, ‘ஹே அழகியே, நீ தற்போது நன்றாக படங்கள் செய்கிறாய் ஆனால் நாளையே மோசமாக தோற்பாய். அதனால் நாளை நீ மீண்டு வர வேண்டுமானால் மனிதர்களுடன் கனிவாக நடந்துக்கொள்; அவர்கள் உனக்கு அந்த நேரத்தில் உதவுவார்கள் எனக் கூறினார்,

‘அழகியே இப்படி நடந்துகொள்’: ஸ்ரேயாவுக்கு ரஜினி கூறிய அறிவுரை!
ரோஹித் சிறந்த தலைவன்; அவருக்காக உயிரையும் தருவேன்: அஸ்வின் நெகிழ்ச்சி!

ஹிந்தியில் த்ரிஷ்யம் 2 படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இதன் 3ஆம் பாகம் மலையாளத்தில் உருவாகிவருகிறது. த்ரிஷ்யம் படத்தினை ஹாலிவுட்டில் ரீமெக் செய்யவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினியுடன் சிவாஜி படத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com