தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஃபேமிலி ஸ்டார் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ஃபேமிலி ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2024, 9:09 am

DIN

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ஃபேமிலி ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் இந்தியா அளவில் டிரெண்டானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. ராஷ்மிகாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் கவனம் பெற்றன. அவரது நடிப்பில் சமந்தாவுடன் நடித்த குஷி திரைப்படம் கடைசியாக வெளியாகி வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஃபேமலி ஸ்டார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.மேலும் படம் வரும் ஏப்ரல் 5ஆம் நாள் வெளியாகுமெனவும், விரைவில் டிரைலர் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.