நடிகை மீதா ரகுநாத் திருமணம்!

குட் நைட் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை மீதா ரகுநாத்துக்கு திருமணம் முடிந்துள்ளது.
நடிகை மீதா ரகுநாத் திருமணம்!
DOTCOM

’முதலும் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மீதா ரகுநாத். வெள்ளந்தியான தோற்றத்தைக் கொண்ட இவரின் நடிப்பு பெரிதும் கவனிக்கப்பட்டது.

தொடர்ந்து, நடிகர் மணிகண்டன் நடித்த குட் நைட் படத்திலும் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், நடிகை மீதா ரகுநாத் தன் உறவினர் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது, ‘என் மொத்த இதயம்’ என்கிற வார்த்தையைக் குறிப்பிட்டு கணவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com