உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

ஆடு ஜீவிதம் படத்துக்காக கணவர் பிருத்விராஜை புகழ்ந்து பதிவிட்டுள்ளார் அவரது மனைவி சுப்ரியா பிருத்விராஜ்.
உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக பிருத்விராஜுன் நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர்.

பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று (மார்ச் 28 ) இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் இப்படம் வெளியாகியுள்ளதால் வசூலில் பெரிய சாதனையைப் படைக்கும் என்றே கருதப்படுகிறது.

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!
ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

சுப்ரியா பிருத்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:

16 வருட பயணத்தின் பயன் நாளை (மார்ச்.28) நாளை தெரியுமா? 2006 நவம்பரில் இருந்து எனக்கு பிருத்விராஜைத் தெரியும். 2011இல் திருமணம் செய்தேன். பிருத்விராஜைப் பலபல படங்களில் பார்த்துள்ளேன். ஆனால் இது போல எப்போதுமில்லை. கடுமையான விரத நாள்களிலும் நீ தொடர் பசியுடனும் கலைப்பாகவும், பலமிழந்தும் இருப்பாய். கரோனா காலத்தில் உலகமே ஒன்றாக இருந்தாலும் நாம் பிரிந்திருந்தோம்.

பாலைவனத்தில் முகாமில் இருந்ததால் மோசமான இணைய வசதியினால் மிக மதிப்புள்ள சில நொடிகள் மட்டுமே நாம் பேசினோம். இந்த ஒரு படத்தினால் நீ, பல வேற்றுமொழி பட வாய்ப்புகளை இழந்தாய். இவ்வளவுக்கு மத்தியிலும் கவனத்துடன் நீ கலைக்காக செய்தது இன்று உனக்காக நிற்கும்.

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!
சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

ஒரு மனிதனை திரையில் காட்ட இயக்குநர் பிளெஸ்ஸியுடன் படக்குழுவும் இணைந்து உடல், மனம் என அனைத்தும் அர்பணித்துள்ளீர்கள். உங்களது உழைப்புக்கு நாளை (மார்ச்28) பலன் கிடைக்கும். ஒன்று மட்டுமே சொல்லுவேன், உன்னுடைய அர்பணிப்புக்கு ஈடு இணையே கிடையாது. எனது கண்களுக்கு நீ எப்போதும் ஒரு கோட் (தலைசிறந்தவன்)தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com