காதல் திருமணம்தான்; ஆனால்...: விஜய் தேவரகொண்டா கூறியது என்ன?

நடிகர் விஜய் தேவரகொண்டா தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
காதல் திருமணம்தான்; ஆனால்...: விஜய் தேவரகொண்டா கூறியது என்ன?

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் இந்தியா அளவில் பிரபலமானவர்தான் நடிகர் விஜய் தேவரகொண்டா. ராஷ்மிகாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் கவனம் பெற்றன. அவரது நடிப்பில் சமந்தாவுடன் நடித்த குஷி திரைப்படம் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஃபேமலி ஸ்டார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர் நடித்துள்ளார்.

படம் வரும் ஏப்ரல் 5ஆம் நாள் வெளியாகவுள்ளது. நேற்று தமிழ் டிரைலர் வெளியானது.

காதல் திருமணம்தான்; ஆனால்...: விஜய் தேவரகொண்டா கூறியது என்ன?
உங்களுடன் அதிக நேரம் செலவிட்டிருக்க வேண்டும் சித்தப்பா: அதர்வா உருக்கம்!

இந்நிலையில் நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் தேவரகொண்டா, “எனக்கு விரைவில் திருமணம் நடக்கும். நிச்சயமாக காதல் திருமணம்தான். ஆனால், எனது பெற்றோர் சம்மதத்துடன்தான் நடக்கும். அரசியலில் விருப்பம் இல்லை. இன்னும் 20,30 ஆண்டுகள் நடித்துவிட்டு யோசிக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

நடிகை ராஷ்மிகாவுடன் அடிக்கடி காதல் சர்ச்சையில் சிக்குவார் விஜய் தேவரகொண்டா. ஆனால் இது குறித்து அவர்கள் எதுவும் மறுப்பும் சம்மதமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் திருமணம்தான்; ஆனால்...: விஜய் தேவரகொண்டா கூறியது என்ன?
இதுவரைப் பார்க்காத ரஜினியை ‘தலைவர் 171’ படத்தில் பார்க்கலாம்: லோகேஷ் கனகராஜ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com