
நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் வெற்றிப்பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ரீமெக்கான இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, மகான் படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்து பெயர்ப் பெற்றார்.
துருவ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தூத்துக்குடியில் துவங்க உள்ளதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகளை மாரி செல்வராஜ் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், மே.6 ஆம் தேதி அப்டேட் வெளியாகும் என்பதைக் குறிக்கும் விதமாக இப்படத்திற்கான போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.