குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பிரபலம் ஒருவர் விலகியுள்ளார்.
குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!
Published on
Updated on
1 min read

மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த ஏப். 27 ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த புதிய சீசனில் சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் நடுவர்களாக பங்கேற்கிறர்கள். ரக்‌ஷன் மற்றும் மணிமேகலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.

குக்குகளாக யூடியூபர் இர்ஃபான், நடிகர் விடிவி கனேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே, வசந்த் வசி, சுஜிதா, அக்‌ஷெய் கமல், திவ்யா துரைசாமி, பாடகி பூஜா, ஷெர்லின் சோயா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நாஞ்சில் விஜயன்
நாஞ்சில் விஜயன்

கோமாளிகளாக கடந்த சீசன்களில் பங்கேற்ற, புகழ், சுனிதா, குரேஷி உள்ளிட்டோரும், புதிதாக, விஜய் டிவி புகழ் ராமர், ஷப்னம், அன்ஷிதா, சரத், வினோத், நாஞ்சில் விஜயன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!
ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!
ஃபரீனா
ஃபரீனா

இந்நிலையில், நாஞ்சில் விஜயன் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”விஜய் டிவியுடன் எந்த ஒரு பிரச்னையும் இல்லை, ஆனால் பாக்ஸ் ஆபிஸ் நிறுவனத்தின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் விஜயனுக்கு பதிலாக பாரதி கண்ணம்மா தொடர் பிரபலம் ஃபரீனா புது கோமாளியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com