தென்னிந்தியளவில் கவனம்பெற்ற நடிகராக இருப்பவர் டோவினோ தாமஸ். மாயநதி, மின்னல் முரளி, 2018, தள்ளுமலா உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.
இறுதியாக, நடிகர் லாலின் மகனும் இயக்குநருமான லால் ஜூனியர் (ஜீன் லால்) இயக்கத்தில் நடிகர் என்கிற படத்தில் நடித்தார். முதலில் இப்படத்திற்கு நடிகர் திலகம் எனப் பெயரிட்டிருந்தனர். ஆனால், சில காரணங்களால் திலகத்தை நீக்கிவிட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை 1000 திரைகளில் வெளியானது நடிகர். ஆனால், படத்தின் கதை மற்றும் திரைக்கதை சொதப்பலால் இப்படம் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.
உருவாக்கத்தில் செலுத்திய கவனத்தை கதையில் செலுத்தியிருந்தால் நல்ல படமாக இருந்திருக்கும் என்றே பலரும் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, மலையாள சினிமாக்கள் வசூலில் கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில், நடிகர் திரைப்படமும் பெரிய வசூலைக் குவிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரூ.40 கோடியில் உருவான இப்படம் இந்தியளவில் முதல் 4 நாள்களில் ரூ.4 கோடியைக் கூட வசூலிக்காதது டோவினோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நடிகர்களில் டோவினோ தாமஸும் ஒருவர். ஆனால், அவர் இறுதியாக நடித்த சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இதனால், டோவினோ கூடுதல் கவனத்துடன் கதைகேட்டு வருகிறாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளிச்சட்டம்பி வெளியீட்டுத் தேதி மாற்றம்!
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

ஈஸ்டர் நன்னாளில் வெளியாகும் பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
என்டிஆர் - நீல் திரைப்படத்திலிருந்து விலகிய டொவினோ தாமஸ்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


