மீண்டு வருவாரா அதர்வா?

நடிகர் அதர்வா டிஎன்ஏ திரைப்படத்தில் 2 தோற்றங்களில் நடித்துள்ளாராம்.
மீண்டு வருவாரா அதர்வா?

நடிகர் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் டிஎன்ஏ. இப்படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கி வருகிறார்.

கிரைம் திரில்லர் வகையில் இப்படம் உருவாகி வருவதாகத் தகவல். டிஎன்ஏ படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மீண்டு வருவாரா அதர்வா?
சுவாரஸ்யமான கதை! ஆனால்.. ரசவாதி - திரை விமர்சனம்!

இப்படத்தில் நடிகர் அதர்வா மற்றும் நிமிஷா இருவரும் 2 தோற்றங்களில் வருவதாகவும் இதுவரை பார்க்காத அதர்வாவை இந்தப் படத்தில் பார்க்கலாம் என்றும் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

அதர்வா நடிப்பில் இறுதியாக வெளியான குருதி ஆட்டம், டிரிக்கர், பட்டத்து அரசன் உள்ளிட்ட திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் தோல்விப்படமாகின.

ஆனால், மத்தகம் இணையத் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றதால் மீண்டும் சில படங்களில் அதர்வா ஒப்பந்தமாகியுள்ளார். அதில், டிஎன்ஏ திரைப்படம் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதில், வெற்றி பெற்று மீண்டும் முக்கிய நாயகனாக வலம் வருவாரா? என்பதே அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com