
சின்னத்திரை தொடரான சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
இதனைத் தொடர்ந்து, டாடா படத்தின் மூலம் கவின் பிரபலமடைந்தார். தற்போது, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவான ‘ஸ்டார்’ படத்தில் நடித்துள்ளார்.
இப்படம், கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ஆனால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
ஆனால், இப்படம் முதல் மூன்று நாள்கள் முடிவில் உலகளவில் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதேநேரம், ஸ்டார் புதிய சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. படத்தின் ஒரு காட்சியில் கவினின் உருவப்படத்துடன் நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், அஜித் உள்ளிட்டோரின் படங்களும் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தியளவில் பெரிய நடிகர் எனப் பெயரெடுத்த நடிகர் கமல்ஹாசனின் உருவப்படம் முதல் வரிசையில் இல்லாதது அவரின் ரசிகர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும் நடிகர் கமல்ஹாசனை ஸ்டார் இயக்குநர் ஏன் புறக்கணித்தார்? என விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதனால், புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.