
தமிழ், தெலுங்கு சினிமாவுக்கு போதாத காலம்போல் இருக்கிறது. தொடர்ந்து வெளியாகும் திரைப்படங்கள் எதுவும் சரியாக வெற்றிபெறாததால் பல திரையரங்கங்கள் திணறி வருகின்றன.
இந்தாண்டில் மலையாள சினிமாக்கள் வசூல் வேட்டையை நிகழ்த்தி வரும் வேளையில், தெலுங்கில் உருவான திரைப்படங்கள் எதுவும் ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை. சமீபத்தில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது.
இதனால், ரசிகர்கள் வருகை குறைவதால் பல திரையரங்கங்கள் பராமாரிப்பை முறையாகக் கவனிக்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளன. மேலும், பள்ளி பொதுத்தேர்வுகள், சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல், ஐபிஎல் உள்ளிட்ட காரணங்களாலும் திரைப்படங்களைத் திரையரங்கங்களில் காண்பது குறைந்துள்ளது.
தேர்வுகள் முடிந்தாலும் தேர்தல் மற்றும் ஐபிஎல்லின் பரபரப்புகள் முடியவில்லை என்பதால் தெலங்கானாவில் உள்ள ஒரு திரைகளைக் கொண்ட திரையரங்கங்களை (சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்) வருகிற மே.17 ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு மூட முடிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, திரையரங்க உரிமையாளர்கள் இப்பிரச்னையை சந்தித்து வருகின்றனர். நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா - 2 திரைப்படமும் பிரபாஸின் கல்கி திரைப்படமும் வெற்றி பெற்றால்தான் தொழிலை நடத்த முடியும் என பலரும் புலம்புகின்றனர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.