
ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
மூன்று தோற்றங்களில் நடித்திருந்த விக்ரம் சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், இத்திரைப்படத்தை 4கே தரத்தில் அந்தியன் திரைப்படம் இன்று (மே.17) தொழில்நுட்பத்தில் ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டது.
தெலுங்கில் அபரிசித்துடு என்ற பெயரில் வெளியானது. இதனை தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.
அந்நியனைப் போன்று வேடமிட்டு ரசிகர்கள் ஒருவர் திரையரங்கில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஷங்கர் ராம் சரணை வைத்து கேம் செஞ்சர் படத்தினை நடிகர் கமலை வைத்து இந்தியன் 2 படத்தினையும் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.