சின்னத்திரை தொடரான சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
இதனைத் தொடர்ந்து டாடா படத்தின் மூலம் சினிமாவில் கவின் பிரபலமடைந்தார்.பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக அதிதி எஸ். போஹன்கர் நடித்துள்ளார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கவிருக்கிறார். உடன் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். .
நகைச்சுவை நடிகர் பால சரவணன் இதில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி. இசையமைக்கிறார். அறிமுக இயக்குநர் விக்ரமன் அசோக் இயக்குகிறார்.