
கமல்ஹாசன் எழுதிய ‘தாயம்’ என்ற கதையை மையமாக கொண்டு கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆளவந்தான்’. நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்க சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரித்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வித்யாசமான உளவியல் சிக்கலை பேசும் திரைக்கதையில் உலக நாயகன் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்திருப்பார். கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரு மாதிரி தோரணையில் நடிப்பை வெளிபடுத்தி மிரட்டியிருப்பார்.
மேலும், இப்படம் பிரம்மாண்டமாகவும் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக தொழில்நுட்ப கலைஞர்கள், கருவிகள் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு படமாக்கியிருப்பார்கள்.
அனிமேஷன் காட்சிகள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று இந்திய சினிமாவில் தனித்துவமான முயற்சியில் இறங்கி பார்வையாளர்களுக்கு வித்யாசமான மற்றும் பிரம்மாண்டமான உணர்வை கொடுப்பதற்காக படக்குழு இறங்கியது.
இருப்பினும், அப்போதைய சூழலில் படக்குழுவினர் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. சில மாதங்களுக்கு முன் டிஜிட்டல் மெருகேற்றல் செய்து மீண்டும் ஆளவந்தான் படத்தை மறுவெளியீடு செய்து அதில் படக்குழு வெற்றிபெற்றது.
இந்த நிலையில், மறுவெளியீடான ஆளவந்தான் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.