தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவரும் விஜய் சேதுபதி தனது 52வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு டிரெயின் எனப் பெயரிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரின் 50-வது படமான மகாராஜா விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையே, பாலிவுட் படங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா நடிகர் விஜய் சேதுபதியைச் சந்தித்துள்ளார். இது பொதுவான சந்திப்பா இல்லை திரைப்பட பேச்சுவார்த்தையா எனத் தெரியவில்லை.
ஆனால், சந்திப்பிற்குப் பின் ராம் கோபால் வர்மா தன் எக்ஸ் பக்கத்தில், “இவரைப் பலமுறை திரையில் பார்த்த பிறகு, இறுதியாக உண்மையான விஜய் சேதுபதியைச் சந்தித்தேன். திரையைவிட நேரில் இன்னும் சிறந்தவராக இருக்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.