கவனம் ஈர்க்கும் பி.டி. சார் படத்தின் புதிய பாடல்!

கவனம் ஈர்க்கும் பி.டி. சார் படத்தின் புதிய பாடல்!

பி.டி. சார் படத்தின் புதிய பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Published on

மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.

தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்துக்கு ’பி.டி. சார்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

கவனம் ஈர்க்கும் பி.டி. சார் படத்தின் புதிய பாடல்!
இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், ராம் சரண்?

மேலும் இப்படத்தில் காஷ்மிரா பர்தேசி, பிரபு, பாக்யராஜ், பாண்டியராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும், இப்படம் மே 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பி.டி. சார் படத்தின் இரண்டாவது பாடலான 'நக்கல் புடிச்சவன்' பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. சமூக ஊடகங்களிலும் டிரெண்டாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com