27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்

27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்

27 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை கஜோல் இருவரும் புதிய படம் ஒன்றில் மீண்டும் இணைய உள்ளனர்.

தெலுங்கு இயக்குநர் சரண் தேஜ் உப்பலபதி பாலிவுட்டில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

அதிரடி த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் பிரபுதேவா மற்றும் கஜோலைத் தவிர, நசிருதீன் ஷா, சம்யுக்தா மேனன், ஜிஷு சென்குப்தா மற்றும் ஆதித்யா ஷீல் ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்தின் இசையமைப்பாளராக ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் பணியாற்றுகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசரை விரைவில் வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

இதற்கு முன்பு கஜோலும், ரபுதேவாவும், ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு' படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் இந்தியில் 'சப்னய்' என்ற பெயரில் வெளியானது. தற்போது இவர்கள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com