‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்படம் முக்கியமான விருதைப் பெற்று அசத்தியுள்ளது.
‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

77-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்றது. உலகம் முழுவதுமிருந்து திரைத்துறை பிரபலங்கள், ரசிகா்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனா். பல்வேறு மொழித் திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். அந்தவகையில், இந்திய ஆவணப்பட இயக்குநர் பாயல் கபாடியா இயக்கத்தில் உருவான, ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட் (All We Imagine as Light)’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதில், கனி கஸ்ருதி, திவ்ய பிரபா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

30 ஆண்டுகளுக்குப் பின் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்குபெறும் இந்திய திரைப்படம் இதுதான் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படம் ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றது.

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!
கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

தொடர்ந்து, விருது வழங்கும் நிகழ்வு நேற்று (மே.25) நடைபெற்றது. அதில், இப்படத்திற்கு கிராண்ட் பிரிக்ஸ் (grand prix) விருது வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெற்ற முதல் இந்திய திரைப்படம் என்பதால், இது இந்திய சினிமாவின் மைல்கல் என பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பாம்டி’ஓர் விருதுக்குப் பிறகு இரண்டாவது மதிப்புமிக்க விருதான கிராண்ட் பிரிக்ஸை வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற பெருமையைப் பாயல் கபாடியா பெற்றுள்ளார்.

முன்னதாக, கபாடியா இயக்கிய, ‘எ நைட் ஆஃப் நௌவிங் நத்திங்’ (A NIGHT OF KNOWING NOTHING) என்ற ஆவணப்படம் 2021-ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவில் ‘கோல்டன் ஐ’ விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

நடிகைகளுடன் இயக்குநர் பாயல் கபாடியா (கருப்பு உடை)
நடிகைகளுடன் இயக்குநர் பாயல் கபாடியா (கருப்பு உடை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com