
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.
இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுக்கு முன்பு இந்தியன் முதல் பாகத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 7 ஆம் தேதி மறுவெளியீடு செய்ய உள்ளதாக இந்தியன் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.