
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹாவுக்கு பெற்றுத் தந்தது.
இதனைத் தொடர்ந்து, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், மகான், சாமி 2, பேட்டா உள்ளிட படங்களில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
நடிகர் பாபி சிம்ஹா, மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்துக்கு 'நான் வயலன்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தில் யோகிபாபு, மெட்ரோ ஷிரிஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நான் வயலன்ஸ் படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.