ஃபாசில் ஜோசஃப்க்கு ஜோடியான நஸ்ரியா!

நடிகர்கள் ஃபாசில் ஜோசஃப் - நஸ்ரியா கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.
ஃபாசில் ஜோசஃப்க்கு ஜோடியான நஸ்ரியா!

நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா. தொடர்ந்து, ராஜா ராணி, நையாண்டி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின், நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்டவர் சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.

நீண்ட நாள்களுக்குப் பின் நானியுடன் அடடே சுந்தரா படத்தில் நாயகியாக நடித்து அசத்தினார். தற்போது, திரைப்படத் தயாரிப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், மலையாள திரைப்படமொன்றில் நாயகியாக நஸ்ரியா நடிக்கிறார். ‘சூட்சம தர்ஷினி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகனாக இயக்குநர் ஃபாசில் ஜோசப் நடிக்கிறார்.

ஃபாசில் ஜோசஃப்க்கு ஜோடியான நஸ்ரியா!
வணங்கான் எப்போது?

மின்னல் முரளி படத்தை இயக்கிய ஃபாசில், ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, ஃபலிமி உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

தற்போது, நஸ்ரியாவுடன் அவர் இணைந்து நடிக்க உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com