
நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் கருடன்.
இந்தப் படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இப்படம் நாளை (மே 31) வெளியாகிறது.
இதற்கிடையே, நேர்காணல் ஒன்றில் பேசிய சூரி, “இனிமேல் துணைக் கதாபாத்திரமாக நடிக்க முடியாது என நினைக்கிறேன். கதை நாயகனாகவே நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்காக கதை சொல்லவும் தயாரிக்கவும் சிலர் முன்வரும்போது அதை ஏன் நான் தேர்வு செய்யக்கூடாது? எங்கோ இருந்த என்னை ரசிகர்கள் இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த வழியிலேயே செல்லலாம் என இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.