
நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட அமரன் படக்குழுவை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31 அன்று திரையரங்குகளில் வெளியானது.
மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
இதையும் படிக்க: அதிகரிக்கும் காட்சிகள்... லக்கி பாஸ்கர் வசூல் இவ்வளவா?
தொடரந்து,அமரன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே முதல் நாளில் பெரிய வசூலைப் பெற்ற திரைப்படம் இதுதான். மேலும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் இந்த வார முடிவில் ரூ.120 கோடியைத் தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அமரன் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியதுட நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தன் வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார்.
படம் குறித்து பேசிய ரஜினிகாந்த், “முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைப் படமாக எடுத்த ராஜ்கமல் நிறுவனத்துக்கு நன்றி. நடிகர் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். கிளைமேக்ஸில் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படியான படத்தை எடுத்ததற்காகக் கமல்ஹாசனையும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியையும் எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.