பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரிலிருந்து விலகுகிறேனா? உண்மை உடைத்த ராஜி

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலிருந்து நடிகை ஷாலினி விலகுவதாக சமூகவலைதளத்தில் தகவல்கள் பரவிய நிலையில், நடிகை ஷாலினி விளக்கம்.
actress shalini
நடிகை ஷாலினிஇன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலிருந்து நடிகை ஷாலினி விலகுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், இதற்கு நடிகை ஷாலினி விளக்கமளித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரிலிருந்து தான் விலகவில்லை என்றும், சமூகவலைதளங்களில் பரவும் தகவல் அடிப்படை உண்மையற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரில் ராஜி பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஷாலினி. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. தற்போது இரண்டாவது பாகம் அப்பா, மகன்களின் பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் மூன்று மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களுக்கு வரும் மருமகள் மூலம் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இளைய மருமகளாக நடிப்பவர் ராஜி.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கதாநாயகி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி, வெற்றி பெற்றவர் ஷாலினி. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

ராஜியாக நடிக்கும் ஷாலினி
ராஜியாக நடிக்கும் ஷாலினிஇன்ஸ்டாகிராம்

சமூகவலைதளங்களில் வதந்தி

சிறந்த நடனக் கலைஞரான ஷாலினி, அடிக்கடி சமூகவலைதளங்களில் தனது நடன விடியோக்களைப் பதிவிடுவது வழக்கம். சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்.

இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரிலிருந்து நடிகை ஷாலினி விலகுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

ஷாலினியின் பதிவு
ஷாலினியின் பதிவுஇன்ஸ்டாகிராம்

இந்நிலையில், இது குறித்து நடிகை ஷாலினி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஷாலினி,

''ரசிக குடும்பத்தாருக்கு வணக்கம். பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரிலிருந்து நான் விலகியதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். இதனைப் பொருட்படுத்த வேண்டாம். நான் என்றுமே ராஜியாகவே தொடருவேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.