மோசமான பழக்கத்தை கைவிட்ட நடிகர் ஷாருக் கான்!

பிறந்தநாளையொட்டி ஷாருக்கான் இந்த முடிவை எடுத்துள்ளார்.
Shah Rukh Khan
ஷாருக் கான்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

புகைப் பழக்கத்தை விட்டுவிட்டதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அறிவித்துள்ளார்.

59வது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், ஷாருக்கான் இந்த முடிவை எடுத்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகரான இருக்கும் ஷாருக் கான் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

மனைவி கெளரி கான், மகள் சுஹானா கான் குடும்ப உறுப்பினர்கள் உள்பட ரசிகர்கள் பலர் ஷாருக் கானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்பொழுது நடைப்பெற்ற மீட் அன்ட் கிரீட் என்ற பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் ஷாருக்கான் பேசியதாவது,

"நான் இப்பொழுது புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டேன். புகைபிடிப்பதை நிறுத்திய பின் சுவாசம் சீராக இருப்பதை உணரமுடிகிறது" எனக் குறிப்பிட்டார். இது ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நேர்காணலில் ஷாருக்கான், தான் ஒரு நாளுக்கு 100 சிகரெட்டுகளை பிடித்துக்கொண்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். உணவு , தண்ணீர் என எதுவும் உட்கொள்ளாமல், 30 கோப்பை காபி மட்டும் குடித்துக்கொண்ட காலமும் இருந்ததாகத் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.