
நடிகை நிவேதா பெத்துராஜ், தன் பணத்தை சிறுவன் ஒருவன் திருடிவிட்டதாகக் கூறியுள்ளார்.
மதுரையில் பிறந்தவரான நிவேதா பெத்துராஜ் சினிமா மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். தமிழில், ‘ஒருநாள் கூத்து’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நடித்தார்.
பின், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நிவேதா பெத்துராஜ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டார்.
அதில், “சென்னை அடையார் சிக்னலில் காருக்குள் இருந்தபோது சிறுவன் ஒருவன் புத்தகத்தைக் காட்டி ரூ. 50 என்றான். நான் ரூ. 100-யைக் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கினேன். பாக்கி ஐம்பது ரூபாயைத் திருப்பிக்கேட்டால், அச்சிறுவன் ரூ. 500 கொடு என்றான். உடனே, அந்தப் புத்தகத்தை அவனிடம் கொடுத்து, என் பணத்தைத் திருப்பிக் கேட்டேன். பணத்தைக் கொடுத்தவன், திடீரென புத்தகத்தைக் காருக்குள் வீசியபடி என்னிடமிருந்த ரூ. 100-யைப் பிடுங்கிக்கொண்டு சென்றுவிட்டான். நீங்கள் யாராவது இந்தப் பிரச்னையைச் சந்தித்துள்ளீர்களா?” என தனக்கு நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க: ரூ. 500 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் சூர்யா?
இது சமூக வலைதளங்களில் வைரலானதும், அடையார் போலீஸார் இச்சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.