பிக் பாஸில் சிவாஜி பேரன்! 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் யார்?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நுழைந்த வைல்டு கார்டு போட்டியாளர்கள்.
சிவக்குமார்
சிவக்குமார்படம்: insta/vijaytv
Published on
Updated on
2 min read

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் கலந்து கொண்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நான்கு வாரங்களை கடந்துள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரன், அர்ணவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இந்த சீசனில் ஆண்கள், பெண்கள் என்ற வகையில் இரு வீடாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சீசன்களை போன்று சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில், நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதியும் போட்டியாளர்களுக்கு தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், பிக் பாஸில் மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில், 6 வைல்டு கார்டு போட்டியாளர்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்த விஜய் சேதுபதி, நேற்று வீட்டுக்குள் அனுப்பினார்.

சிவாஜியின் பேரன்

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமார் வைல்டு கார்டு போட்டியாளர்களில் ஒருவராக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

தயாரிப்பாளர் ராம்குமாரின் மகனான சிவக்குமார், 2008ஆம் ஆண்டில் கதாநாயகனாக நடித்த சிங்கக்குட்டி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது.

இதையடுத்து, இயக்குநர் பாலு மகேந்திராவிடம் பயிற்சி பெற்று, பல மேடை நாடகங்களில் பங்கேற்றுள்ளார் சிவக்குமார்.

இவரின் மனைவி சுஜா வருணி, பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு 90 நாள்களுக்கு மேல் வீட்டில் இருந்துள்ளார். பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியாக களமிறங்கிய போட்டியாளர்கள்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் தனது பேச்சாற்றலின் மூலம் அனைத்து போட்டியாளர்களிடமும் ஆதிக்கம் செலுத்தும் நபராக முத்து குமரன் உள்ளார். இந்த நிலையில், அவருக்கு போட்டியாக, அவரின் தோழியும் பேச்சாளருமான மஞ்சரி களமிறக்கப்பட்டுள்ளார்.

உடல் வலு சார்ந்த டாஸ்க்குகள் பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டால், ஆண்கள் அணியின் சத்யா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவரை சமாளிக்கும் விதமாக உடற்பயிற்சி ஆர்வலர் வர்ஷினி களமிறக்கப்பட்டுள்ளார்.

மேலும், தமிழும் சரஸ்வதியும் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமான ராயன், இறைவி, பைரவா, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராணவ் ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்துள்ளனர்.

அதேபோல், பிக் பாஸ் நிகழ்ச்சி விமர்சகரான நாகப்பிரியா என்ற ரியாவும் நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

நான்காவது வாரத்தில் யாரும் வெளியேறாத நிலையில், ஏற்கெனவே இருண்டஹ் 15 போட்டியாளர்களுடன் சேர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டில் 21 போட்டியாளர்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com