வாழு, வாழவிடு..! ரசிகர்களின் கேள்விக்கு கோபமடைந்த சமந்தா!

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாழு, வாழவிடு..! ரசிகர்களின் கேள்விக்கு கோபமடைந்த சமந்தா!
Published on
Updated on
1 min read

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

சமீபத்தில், நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் நிச்சயதார்த்தம் செய்தார்கள்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் பல கேள்விக்கு பதிலளித்தார். அதில் சில ரசிகர்கள், “தயவுசெய்து இன்னும் கொஞ்சம் உடல் எடையைக் கூட்டுங்கள்” எனக் கூறினார். அதற்கு சமந்தா மிகவும் வருத்தப்பட்டார்.

இதற்கு பதிலளித்த சமந்தா, “மீண்டும் உடல் எடை குறித்த கேள்வி. உங்களுக்குத் தெரியுமா, நான் மிகவும் கட்டுக்கோப்பாக உடல் எடையை பாதுக்காக்க ஆன்டி-இன்பிளாமெட்ரி டயட்டில் இருக்கிறேன். குறிப்பிட்ட எடைக்குள் இருக்க இதைச் செய்கிறேன்.

ஏனெனில் எனக்கு இருக்கும் மயோசிடிஸ் நோய் அப்படியானது. மற்றவர்களைக் குறித்து மதிப்பிடுவதை நிறுத்துங்கள். அவர்களை அவர்களாகவே வாழ விடுங்கள். வாழு, வாழவிடு. தயவுசெய்து மக்களே, இது 2024ஆம் வருடம்” என்றார்.

நடிகை சமந்தா கடைசியாக குஷி படத்தில் நடித்திருந்தார். தற்போது, மா இன்டி பங்காரம் படத்தில் நடித்து வருகிறார். சிட்டாடல் இணையத்தொடர் சமீபத்தில் வெளியானது.

கௌதம் மேனம் இயக்கும் படத்தில் மலையாளத்திலும் சமந்தா அறிமுகமாகவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஜிக்ரா புரமோஷன் நிகழ்வில் ஆலியா பட் சமந்தாவை மிகவும் புகழ்ந்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com