அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இவர்கள் விரைவில் விவகாரத்து பெறவிருப்பதாகவும் புரளிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், மணி ரத்னம் படம் ஒன்றில் இருவரும் இணைந்து நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் விவகாரத்துத்தகவல் போல உறுதி செய்யப்படாவிட்டாலும், புரளியாகவே பரவி வருகிறது. இருதரப்பிலிருந்தும் எந்த விளக்கமும் பரவில்லை.
திரையில் இணைந்த இந்த ஜோடி பிறகு வாழ்விலும் இணைந்தது. தற்போது வாழ்வில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாக சூழ்நிலைகள் சொல்லும் நிலையில், மீண்டும் இவர்கள் திரையில் இணைவார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
அதாவது உறுதி செய்யப்படாத அந்த தகவல் என்ன சொல்கிறது என்றால், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மணி ரத்னம், புதிய ஹிந்தி படம் ஒன்றை இயக்கவிருப்பதாகவும், அதில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே 2007ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கியிருந்த குரு படத்தில் இந்த நட்சத்திர ஜோடி இணைந்து நடித்திருந்தனர். அந்த படம்தான் அவர்களை நிஜ ஜோடிகளாக்கக் காரணமாக அமைந்தது.
இந்த இணையை மக்கள் பலரும் அதிகம் விரும்பினர். இந்த நிலையில்தான் தற்போது விவகாரத்து சர்ச்சை வலுத்து வரும் நிலையில், மீண்டும் மணி ரத்னம் படத்தில் இவர்கள் இணைவார்களா? இது விவகாரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
ஒருவேளை, இந்த படம் சொன்னது போல உருவானால், அபிஷேக் - மணி ரத்னம் இணையும் நான்காவது படமாக இருக்கும். அபிஷேக், ஐஸ்வர்யா இருவருமே மணி ரத்னம் மீது அதிக மதிப்பு வைத்திருப்பவர்கள். அவர் கேட்டால் இருவருமே மறுக்க மாட்டார்கள் என்று கூறப்படும் நிலையில்.. உண்மை என்ன என்பது விரைவில் தெரிய வரும்.