மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடலுக்கு இந்திய விமானப் படை சார்பில் வீரர்கள் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினர்.
பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். சென்னை ராமபுரத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் டெல்லி கணேஷின் உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னதாக, அவரது உடலுக்கு விமானப் படை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரது உடலுக்கு விமானப் படையின் கொடியை போர்த்தி வீரர்கள் இறுதி மரியாதை அளித்தனர்.
முன்னாள் விமானப் படை வீரர்
நடிப்பதற்கு முன்னதாக 1964 முதல் 1974 வரை 10 ஆண்டுகள் இந்திய விமானப் படையின் வீரராக டெல்லி கணேஷ் பணியாற்றியுள்ளார்.
போர்க் காலங்களில் அடிபடும் வீரர்களை பொழுதுபோக்கும் விதமாக சக வீரர்களுடன் போட்ட நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய டெல்லி கணேஷ், பின்னாளில் நடிப்புக்காக விமானப் படை வேலையை ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், முன்னாள் விமானப் படை வீரர் என்ற முறையில் டெல்லி கணேஷின் உடலுக்கு இந்திய விமானப் படை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.