சூர்யாவைவிட 3 மடங்கு அதிக சம்பளம் பெற்ற ஜோதிகா!

நடிகர் சூர்யாவைவிட ஜோதிகா மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் பெற்றுள்ளார்...
சூர்யாவைவிட 3 மடங்கு அதிக சம்பளம் பெற்ற ஜோதிகா!
Published on
Updated on
1 min read

தன் மனைவி ஜோதிகா தன்னைவிட அதிக சம்பளம் பெற்றதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

கங்குவா திரைப்படம் நவ. 14 ஆம் தேதி வெளியாவதால் நடிகர் சூர்யா படத்தின் புரமோஷன் பணிகளில் சில நாள்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தார். குறிப்பாக, இந்தியளவில் பல நேர்காணல்களில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.

அப்படி ஒரு நேர்காணலில் பேசும்போது நடிகர் சூர்யா, ”நானும் ஜோதிகாவும் இணைந்து நடித்த முதல் படமான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோதிகா சரளமாக தயக்கமில்லாமல் வசனங்களைப் பேசுவார். ஆனால், நான் தடுமாறிக் கொண்டிருப்பேன். அப்படத்தைத் தொடர்ந்து நானும் ஜோதிகாவும் இணைந்து நடித்தோம். வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவார். மிக நேர்மையானவர்.

ஆனால், தமிழ் தெரிந்தவனாக நான் வசனங்களை மறந்துகொண்டிருந்தேன். காக்க காக்க படத்தின்போது ஜோதிகா பெரிய மார்க்கெட் வைத்திருந்தார். அப்படத்தில் அவர் என்னைவிட மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் பெற்றார். நான் என்னை நாயகன் என கருதவும் எனக்கான வணிகத்தை அடையவும் பல ஆண்டுகள் ஆனது.” எனத் தெரிவித்தார்.

காக்க காக்க படத்தில் சூர்யாவைவிட சில காட்சிகளே வரும் ஜோதிகா அவரைவிட அதிக சம்பளம் பெற்றது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com