நாயுடன் ஒப்பிடப்பட்ட விக்னேஷ் சிவன்..! குற்ற உணர்ச்சியில் நயன்தாரா!

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாராவின் பியாண்ட் தி ஃபேரிடேல் படத்தில் விக்னேஷ் சிவன் பேசியதாவது...
விக்னேஷ் சிவன், நயன்தாரா
விக்னேஷ் சிவன், நயன்தாரா
Published on
Updated on
1 min read

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். அந்தப்படம் ரூ.1140 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.  

இதற்கிடையே, இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு வாடகைத்தாய் மூலம் 2 ஆண் குழந்தைகளுக்கும் தாயாக இருக்கிறார்.

குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காகவே அதிகமான படங்களைத் தேர்ந்தெடுப்பதில்லை.

மண்ணாங்கட்டி, ராக்காயி, டாக்ஸிக் ஆகிய படங்கள் நயன் நடிப்பில் உருவாகி வருகின்றன. நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) எனப் பெயரிடப்பட்ட நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியாகியது.

இந்த ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை நயன்தாரா முன்வைத்தார். எதிர்ப்புக்கு மீறி ஆவண படத்தில் நானும் ரௌடிதான் பட காட்சிகளை இணைத்துள்ளார்கள்.

நாயுடன் ஒப்பிடப்பட்ட விக்னேஷ் சிவன்

இந்த நிலையில் ஆவணப் படத்தில் விக்னேஷ் சிவன் தன்னை நாயுடன் ஒப்பிட்டதாகக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

ஏன் அழகான பெண் ஒரு பீஸ்டை காதலிக்கக் கூடாதா? வாழ்க்கை மிகவும் எதிர்பாராதது. பஸ் கண்டக்டர் (நடத்துனர்) சூப்பர் ஸ்டார் ஆகுவதில்லையா? பெரிய இடத்துக்கு வருவது எதுவும் எளிமையாக நடப்பதில்லை.

குற்ற உணர்ச்சியில் நயன்தாரா

எல்லாவற்றுக்கும் விலை கொடுக்கவேண்டியதுள்ளது. சில நேரங்களில் வாரத்துக்கு ஒருமுறை, மாததுக்கு ஒருமுறை எனக் கூறினார்.

நயன்தாரா, “நான் ஒருவேளை விக்கி வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் அவர் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம். சில நேரங்களில் இதுகுறித்து எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும்” எனக் கூறினார்.

இதற்கு விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்து தனக்கு நயன்தாரா கிடைத்தது மிகப்பெரிய வரம் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com