எனது மகன் அனிமல் பட ரன்பீர் கபூர் போலிருக்கிறான்..! அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி!
இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.
தற்போது, புஷ்பா - 2 திரைப்படம் வரும் டிச.5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் புரமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அல்லு அர்ஜுன் பங்கேற்றுள்ளார். இதன் புரோமோ வெளியாகியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜுன், “ எனது மகன் அனிமல் படத்தில் வரும் ரன்பீர் கபூரைப் போன்றவன். எனக்காக எதையும் செய்யக் கூடியவன். ஆனால், அவனது அம்மாவுக்கு ஒரு பிரச்னை என்றால் என்னையும் கேள்வி கேட்பான்” எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சி நவ.22ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னதாக அனிமல் படக்குழுவும் பங்குபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்நேகா ரெட்டியை 2011இல் திருமணம் செய்த அல்லு அர்ஜுனுக்கு அல்லு அயான் (10) என்ற ஆண் குழந்தையும் அலு அர்ஹா (8) பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வந்தாலும் அனிமல் படம் ரூ.900 கோடி வசூலித்தது. படம் வெளியான சமயத்தில் அல்லு அர்ஜுன் படத்தை பாராட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.