தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயக்குநர் அட்லி தன் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ஹிந்தியில் தெறி படத்தை ரீமேக் செய்துள்ளார்.
பேபி ஜான் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் வருண் தவான் நாயகனாகவும் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நடித்துள்ளனர். காளிஸ் இயக்கியுள்ளார்.
படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தெறி படத்தைவிட பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
முக்கியமாக, எடிட்டிங்கில் ஆக்சன் காட்சிகள் பரபரப்பாக இணைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படம் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் படத்தின் முதல் பாடலின் புரோமோ இன்று வெளியாகியுள்ளது. நவ.25ஆம் தேதி முழுமையான பாடல் வெளியாகவுள்ளது.
இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
Vibe. Tribe. Baby John Vibe Check is live! ð¶ð¥
— Zee Music Company (@ZeeMusicCompany) November 22, 2024
Letâs vibe to the beat of this Thaman S musical! #BabyJohnFirstSingle - #NainMatakka drops on 25th November! ððº#BabyJohn in cinemas this Christmas, on 25th December 2024.@MuradKhetani @priyaatlee #JyotiDeshpande @Atlee_dir pic.twitter.com/akX1kfjkjK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யுகபாரதி எழுதிய ரேனிகுண்டா 2 படத்தின் பாடல் புரோமோ!

நடிகர் சூர்யா பாடிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 2-வது பாடலின் புரோமோ!

வருண் தேஜ் நடித்துள்ள கொரியன் கனகராஜு..! ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ரவி மோகனின் கராத்தே பாபு பட முதல் பாடல்! புரோமோ வெளியீடு!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



