இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை - 2 திரைப்படம் டிச. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில் விஜய் சேதுபதி - மஞ்சு வாரியருக்கு இடையேயான காதல் காட்சிகள் இருக்கின்றன. மேலும், திட்டமிட்ட கதையை மாற்றி நீண்ட நாள்கள் படப்பிடிப்பை மேற்கொண்டனர்.
இளையராஜா எழுதி இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான ’தெனந்தெனமும்..’ பாடல் ரசிகர்களிடம் கவனம் பெற்றது.
இன்று சென்னையில் இசை, டிரைலர் வெளியீடு விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி பங்கேற்றார்கள்.
இந்தப் படம் வரும் டிச.20 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது.