நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் ரேகா, ரோஷினி, ஜனகராஜ் நடித்துள்ளார்கள்.
குணா படத்தின் பாதிப்பில் பல படங்கள் வெளியானாலும் இன்றளவும் குணா படம் சிறப்பான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
சமீபத்தில் வெளியான மஞ்ஞுமெல் பாய்ஸ் படம் குணா படத்தின் பாடல்களை மீண்டும் தமிழர்களுக்கு நினைவூட்டியது.
இந்தப் படம் மீண்டும் ஜூன் 21-ஆம் தேதி மறுவெளியீடு செய்யப் போவதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இதைத் தொடர்ந்து,’குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. எனவே, கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையைக் கோர முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதி, படத்தின் மீதான தடையை விலக்கினார்.
இந்த நிலையில், இப்படம் இன்று (நவ. 29) தமிழக அளவில் மறுவெளியீடாகியுள்ளது.
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் குணா திரைபடம் மறுவெளியீடாகியுள்ளது. மறுவெளியீட்டில் விஜய்யின் கில்லி திரைப்படம் மட்டுமே அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.