ஒருநாள் முன்பாக வெளியாகும் புஷ்பா - 2!

புஷ்பா - 2 வெளியீட்டில் மாற்றம்...
ஒருநாள் முன்பாக வெளியாகும் புஷ்பா - 2!
Simply
Published on
Updated on
1 min read

புஷ்பா - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

படத்தின் டிரைலர் வெளியாகி இந்தியளவில் பெரிய வரவேற்பைப் பெற்றதால் இப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது வெளியீட்டுத் தேதியில் தயாரிப்பு நிறுவனம் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அதன்படி, டிச. 4 ஆம் தேதி இரவு 9.30 மணியிலிருந்தே தெலங்கானாவில் புஷ்பா - 2 திரையிடப்படுகிறதாம். டிக்கெட் விலையாக ரூ. 1,120 - 1,240 வரை உயர்த்தியுள்ளனர்.

அதேநாளில் தமிழகத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புஷ்பா - 2 திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.