துப்பாக்கி குண்டு பாய்ந்து பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல பாலிவுட் நடிகர் மருத்துவமனையில் அனுமதி...
govinda
நடிகர் கோவிந்தாகோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மும்பை: மும்பை: துப்பாக்கி குண்டு பாய்ந்து பிரபல பாலிவுட் நடிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி தவறுதலாக சுட்டதில், நடிகர் கோவிந்தாவின் காலில் குண்டு பாய்ந்ததாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கோவிந்தாவின் உடல் நிலை?

மும்பையில் வசித்து வரும் நடிகர் கோவிந்த் அருண் அஹுஜா என்கிற கோவிந்தா, தனது வீட்டில் வைத்துருந்த துப்பாக்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.45 மணியளவில் எடுத்தபோது தவறுதலாக வெடித்ததில் அவரது காலில் குண்டு பாய்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கோவிந்தாவின் காலில் இருந்து குண்டு அகற்றப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு உடல் நலத்துடன் அவர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கோவிந்தாவின் மேலாளர் கூறியதாவது:

“கொல்கத்தாவில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 6 மணி விமானத்தில் செல்ல இருந்தோம். நான் முன்னதாக விமான நிலையத்துக்கு சென்றுவிட்டேன். கோவிந்தா வீட்டில் இருந்து புறப்படும்போது இந்த விபத்து நடந்துள்ளது.

அலமாரியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்ததில் வெடித்துள்ளது. நல்வாய்ப்பாக அவரது காலில் குண்டு பாய்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த கோவிந்தா?

பாலிவுட் நகைச்சுவை நடிகரான கோவிந்தா 165-க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

2004-ஆம் ஆண்டு மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கோவிந்தா வெற்றி பெற்று 5 ஆண்டுகள் எம்பியாக பதவி வகித்தார்.

தற்போது சிவசேனை கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com