ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும்: தவெக தலைவர் விஜய்!

ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
Published on
Updated on
1 min read

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 30-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்துக்கு செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் ரத்தக் கசிவு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளாமல் எண்டோவாஸ்குலர் சிகிச்சை முறையில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கசிவை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினி: இதய நாளத்தில் என்ன பிரச்னை?

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com