தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தபு தெலுங்கு, ஹிந்தியிலும் அதிக படங்களில் வருகிறார்.
50 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த வயதிலும் தபுவின் அழகு குறையவில்லை என்று அவரது ரசிகர்கள் வியக்கிறார்கள்.
75 படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ள தபு சிறந்த நடிப்புக்காக 2 முறை தேசிய விருதினை வென்றுள்ளார்.
கடைசியாக நடித்த க்ரூ, ஆரோன் மெயின் கஹான் டும் தா படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இணையத்தொடர் ஒன்றும் வெளியாகி கவனம் ஈர்த்தது.
மினி மகாராணி... விஜய் - 69 படத்தில் மமிதா பைஜூ!
இந்நிலையில் ஹைதர் படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை தபு பதிவிட்டுள்ளார். அதில் படத்தின் விடியோவை வெளியிட்டு, “ஹைதர் அக்.2, 2014. பத்தாண்டுகளுக்கு முன்பு இது நடைபெற்றது. படக்குழுவுக்கு நன்றி.” எனக் கூறியுள்ளார்.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் கதையினை தழுவி ஹைதர் படம் எடுக்கப்பட்டது. அத்துடன் 1995ஆம் ஆண்டு காஷ்மீர் பிரச்னைகளையும் கலந்து எடுக்கப்பட்டது.
விசால் பரத்வாஜ் இயக்கிய இந்தப் படத்தில் ஷாகித் கபூர் நடித்திருப்பார். ஷாகித் மகனாக நடித்திருந்தாலும் இவர்களது காட்சிகள் இன்றளவும் ஆய்வுக்குட்படத்தக்கதாக இருக்கின்றன.
இந்தப் படம் பூசான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தின் சர்சையினால் வசூலிலும் கலக்கியது. பின்னர் ரோம் திரைப்பட விழாவில் மக்களின் ஆதரவுடன் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருக்கிறது. தேசிய விருதிலும் இந்தப்படம் 5 விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.