
நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு காரணமென தெலங்கானா அமைச்சர் கேடிஆரை குறிப்பிட்டது பெரும் சர்சையாக வெடித்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்தார்கள்.
அமைச்சரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். நடிகை சமந்தாவும் வருத்தம் தெரிவித்திருந்தார். தற்போது சமந்தாவிடம் அமைச்சர் சுரேகா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் கொண்டா சுரேகா கூறியதாவது:
நான் பேசியது சமந்தாவைப் புண்படுத்த அல்ல; பெண்களைச் சிறுமைப்படுத்தும் அரசியல்வாதியைப் பற்றியது. சமந்தா தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் எனக்கு மட்டும் பெருமை இல்லை அது எல்லோருக்கும் லட்சியப்பாதையாகும்.
எனது கருத்து உங்களையோ அல்லது உங்கள் ரசிகர்களையோ புண்படுத்தியிருந்தால் எனது கருத்தை பின்வாங்கிக் கொள்கிறேன் சமந்தா. அதைத் தவிர்த்து வேறெதும் சொல்வதற்கில்லை எனக் கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது அமைச்சர் கொண்டா சுரேகா, “கேடிஆர் குறித்து நான் கூறிய கருத்தில் இருந்து பின் வாங்கப்போவதில்லை. அவரால் நிறைய இன்னல்கள்களுக்கு ஆளாகியிருக்கேன். அவரைக் குறித்துப் பேசும்போது வேறொரு குடும்பத்தைப் பற்றியும் எதிர்பாராமல் பேசிவிட்டேன். அதுகுறித்து பலரும் எக்ஸில் பதிவிட்டதைப் பார்க்கும்போது வருத்தமாக இருந்தது.
அதனால் நேற்றே அந்தக் கருத்தில் இருந்து பின்வாங்கிவிட்டேன். ஆனாலும் , கேடிஆர் பெண்கள் மீது தரம் தாழ்ந்த பார்வை இருப்பது உண்மைதான். இதில் அவர் என்னை மன்னிப்பு கேட்க சொல்வது வியப்பாக இருக்கிறது. அவரே ஒரு திருடனாக இருந்துவிட்டு திருடன் திருடன் என மற்றவர்களைக் குற்றம் சாட்டுகிறார்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.