த்ரிஷ்யம் - 3 அறிவிப்பு?

த்ரிஷ்யம் - 3 அப்டேட்...
த்ரிஷ்யம் - 3 அறிவிப்பு?
Published on
Updated on
1 min read

த்ரிஷ்யம் - 3 படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகத் தகவல்.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’ , ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய திரைப்படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் 3-ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 

முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் இல்லையென்றாலும் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும் நீதிமன்றக் காட்சியும் படத்தை வெற்றியடையச் செய்தன.

தொடர்ந்து, இந்தப் படத்தின் 3-வது பாகம் உருவாகும் என இயக்குநர் ஜீத்து ஜோசஃப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு த்ரிஷ்யம் - 3 படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.

நடிகர் மோகன்லால், பிருத்விராஜ் இயக்கத்தில் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, த்ரிஷ்யம் - 3 படத்தில் இணையலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com