
ராகுல் வி. சிட்டேலா எழுதிய இயக்கிய குல்மோஹர் படத்துக்கு சிறந்த நடிப்பிற்கான (சிறப்பு ஜூரி விருது) தேசிய விருது மனோஜ் பாய்பேயிக்கு வழங்கப்பட்டது.
இந்தப் படத்தில் ஷர்மிலா தாகுர், சிம்ரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குல்மோஹர் 3 விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இது மனோஜ் பாஜ்பாயிக்கு 4ஆவது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக 1999இல் சத்யா, 2004இல் பின்ஜார், 2021இல் போன்ஸ்லே, ஆகிய படங்களுக்காக தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மனோஜ் பாய்பேயி ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேசிய விருதில் குல்மோஹர் மாதிரியான சிறிய படங்களும் தேர்வாகுவது பெரிய விஷயம். எனது விருதுக்காக நான் கௌரமடைகிறேன். அதே நேரத்தில் இதற்கான அனைத்து புகழையும் நானே எடுத்துக்கொள்ள முடியாது.
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர், என்னுடன் பணியாற்றிய துணை நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் எனது நன்றிகள். என்மீது அன்பைப் பொழியும் ரசிகர்களுக்கும் நன்றி என்றார்.
யார் இந்த மனோஜ் பாஜ்பாயி?
1994இல் ஷேகர் கபூர் இயக்கிய பண்டிட் குயின் படத்தில் அறிமுகமானவர் நடிகர் மனோஜ் பாஜ்பாயி. பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கிய சத்யா படத்தின் மூலம் சினிமாவில் நடித்து மனோஜ் பாஜ்பாயி பிரபலமானார். கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், தமிழில் அஞ்சான், சமர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
55 வயதான இவர் கமர்ஷியல் படங்களைவிட நல்ல சினிமாக்களில் நடிப்பதை நோக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியான இவரது தி ஃபேமலி மேன், ஜோரம், குல்மோஹர் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றன.
சமீபத்தில் தனது 100ஆவது படமான ‘பய்யா ஜி’ மே.24அன்று வெளியானது. தற்போது, ஜீ5 ஓடிடியில் காணக் கிடைக்கிறது.